Saturday, July 25, 2009
ஓர் வாக்காளரின் ஆதங்கம்
மனிதன் வாழ முடிகிறது .
வாக்குறுதிகளை மறப்பதால் தான்
வாக்குறுதிகள் தரப்படுகின்றன.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
வார்த்தை என்னவோ கட்டித்தேன் .
வாழ்க்கை மட்டும் எட்டிக்காய் .
ஆண்டவர்கள் நிலை என்ன?
ஆள விட்டவர்கள் நிலை என்ன ?
ஞாபகம் தெரிந்த நாள் முதல்
ஞாபகம் மறக்கும் நாள் வரை
தெரிந்தவர்கள் இறப்பை எண்ணிவிடலாம் .
ஆட்சியில் சம்பாதிதவர்களை என்ன முடியுமா ?
நமது பொருளாதார கொள்கை
பணக்காரன் மேலும் பணக்காரன்
ஏழை மேலும் ஏழை
எப்படி எழ்மை ஒலியும்
எந்த ஆட்சி வந்தால்
ஏற்ற தாழ்வுகள் அகலும்
சாதிமத சண்டைகள் ஒலியும்
அரசு துறைகள் திருந்தும்
வாக்குகளைப் பெற்றவரிடம்
வாக்குறுதிகள் என்னவாயிற்று என்றால்
"சொல்லுதல யாருக்கும் எளிய - அரியவாம்
சொல்லியவண்ணம் செயல் " என
திருக்குறளைக் காட்டுவர்
வாக்கலாரகிய நாமும்
" இன்னா செய்தாரை ஒருத்தல் -அவர் நானா
நன்னயம் செய்துவிடல் " என ,
திருக்குறள் படி நடந்து
வாக்களிக்கும் கடமையை செய்வோம்
வாக்களிக்கும் பாவிகள் .!!!
வெந்ததை தின்போம்,
விதி முடிந்தால் சாவோம் !!!!!!
Saturday, May 16, 2009
கருவறைக்குள் ....

வெளியே ஓயாத ஒப்பாரி
செவிப்பறை கிழிக்கும் குண்டுகள் ..!
உதைக்கும் பூட்ஸ் கால்கள்
நெஞ்சினில் பதிய
பழகி போனது அலறல் சத்தம் ...!
உள்ளே நானும் வெளியே என் தாயும்
பிறந்த மேனியாய் சிலநாள் ....
தமிழனாகப் பிறப்பது
அத்தனை பெரிய குற்றமா ?!
எனக்காகவே உயிர் வாழ் கின்றலாம்
வயிற்றை தடவிக் அழுது கொண்டே
அடிக்கடி சொல்கிறாள் அம்மா
பனிக்குடம் உடைய
பத்து நாட்களே பாக்கியாம் ...
வெளியே வந்தும் என்ன பயன் , அம்மா?
என்னையும் ஒருநாள்
கொல்லத்தானே போகிறார்கள் !
மிச்சமுள்ள நாட்கள்
கொடுரமாய் நீள்வதற்கு பதில்
நச்சுக் கொடி என் கழுத்தை
இன்றே இருக்கிடக் கூடதா ??
- நன்றி
பொன். திருமலை
ஜூனியர் விகடன்
Monday, May 11, 2009
யோசிப்போர் சாங்கம் (வேறு எங்கும் கிளைகள் கிடையாது)

எனக்கு ஒரு சந்தேகம்...
நடனக் கலைன்னா டான்ஸ் ஆடறது.
வடி கட்டின கஞ்சத்தனம்
சர்தாரின் வீடு தீப்பிடித்து விட்டது.
இன்றைய தத்துவம்
செருப்பு இல்லாம நாம நடக்கலாம்ஆனா,
இன்றைய தத்துவம் 2
என்னதான் காலேஜ் பஸ் டெய்லி காலேஜ் போனாலும்,
யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்ட்
யூனிவர்ஸிட்டி ஃபர்ஸ்டா வர
குங்குமம்
குங்குமம் - இந்த வாரம்
சந்தனம் - அடுத்த வாரம்!!!
மொழி'பெயர்ப்பு'
ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?தெரியலையா?!?!நான் பார்க்க நான் பார்க்க நான்உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும் கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!
நாட்ட்ட்ட்டாமை....
பசுபதி : ஐயா...
டப்பிங் படங்கள்
உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.
சர்தார்
ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
சர்வே
தமிழ் நாட்டு பெண்களிடம் சமீபத்தில்"நீங்கள் யோசிப்பவரை திருமணம் செய்து கொள்ள வேண்டுமா?"என்று ஒரு சர்வே நடத்தப்பட்டது.
சர்தார்
கைடு : சார், சார். அந்த சேர்ல உட்காராதீங்க. அது திப்பு சுல்தானோட சேர்.
சர்தார்
ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?
சர்தார்ஜி
பாபு : அந்த துணி கடையில நம்ம சர்தார்ஜிய போட்டு அடிக்கிறாங்க?
கரப்பான்
மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன.
குறுக்கே
ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.
இன்றைய தத்துவம் 3
பில் கேட்ஸோட பையனா இருந்தாலும்,கழித்தல் கணக்கு போடும்போது,கடன் வாங்கித்தான் ஆகனும்.
இம்சை அரசன் 24ம் புலிகேசி
அமைச்சர் : மன்னா! போருக்கு தயாராக சொல்லி பக்கத்து நாட்டு அரசன் ஓலை அனுப்பியுள்ளான்.
இது யார் சொத்து?
போலீஸ் : ஏன்டா ராஸ்கல்! திருட்டு ரயிலேறியா சென்னை வரைக்கும் வந்தே?
Friday, May 8, 2009
49 ஓ !
ராஜபக்ஷேவுடன் சேர்ந்துகொண்டு ஈழத் தமிழர்களைக் கொன்று குவிக்கும் காங்கிரஸ் கட்சியை தமிழகத்தின் வேரோடும் வேரடி மண்ணோடும் ஒழித்தே தீருவோம் என்று பகிரங்கமாக அறிவித்திருக்கும் விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், அந்தக் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் தி.மு.க கூட்டணியில் இருக்கிறார்.
ஒருத்தரையருத்தர் ஒழித்துக் கட்ட விரும்பும் இரு கட்சிகள் ஒரே கூட்டணியில் இருந்துகொண்டு வாக்காளர்களிடம் கூட்டாக பிச்சைப் பாத்திரம் ஏந்தி வரும் நிகழ்ச்சி இந்திய வரலாற்றிலேயே இப்போதுதான் முதல்முறை நடக்கிறது. பகையாளியை உறவாடிக் கெடுக்கும் உத்தியோ என்னவோ...
கேட்டால் காங்கிரசுக்கு தி.முகவுடன்தான் கூட்டு; வி.சியுடன் இல்லை என்பார்கள். வி.சிக்கு தி.மு.கவுடன்தான் கூட்டு; காங்கிரசுடன் இல்லை என்பார்கள்.
இதே லாஜிக்படி வி.சி.யுடனும் காங்கிரசுடனும் பா.ம.க கூட்டு வைத்துக் கொள்ளலாம். ஆனால் தனக்கு தி.மு.கவுடன் கூட்டு இல்லை என்று சொல்லலாம். பா.மா.கவுடன், வைகோவும் இடதுசாரிகளும் கூட்டு வைத்துக் கொள்ளலாம். ஆனால் தங்களுக்கு காங்கிரசுடன் உறவு இல்லை என்று சொல்லலாம். காங்கிரசுடன் கூட்டு வைக்கும் பா.ம.கவுடன் ஜெயலலிதா கூட்டு வைக்கலாம். மற்றவர்களுடன் உறவு இல்லை எனலாம்.
பாவம் பி.ஜே.பி. அவர்களும் காங்கிரஸ், இடதுகள் இருக்கும் இதே கூட்டணியில் ஜெயலலிதாவோடு மட்டும் கூட்டு வைத்துக் கொள்ள அனுமதித்துத் தொலைக்கலாம். விஜய்காந்த்தும் சரத் குமாரும் (அரசியலில்) சின்ன வயசுக்காரர்கள். 2011 வரை காத்திருக்கலாம். இப்போது காசை வீணாக்க வேண்டாம்.
கருணாநிதியும் ஜெயலலிதாவும் ஆளுக்கு வெவ்வேறு 20 தொகுதிகளை எடுத்துக் கொண்டு , அந்த 20க்குள், தங்களிடம் சரணாகதி அடைந்திருக்கும் தமிழின, தேசிய, புரட்சி வீரர்களுக்கெல்லாம் ஆளுக்கு ஒன்று இரண்டு கொடுத்துவிட்டால், 40 தொகுதியிலும் போட்டியே இல்லாமல் தேர்தலை நடத்தி முடித்துவிடலாம்.
ஏராளமான பணமாவது மிச்சமாகும்.
அட வெட்கங்கெட்டவர்களே.....
என்ன கூட்டணி அமைக்கிறீர்கள் ? எந்தக் கொள்கையும் இல்லாமல், ஏன் ஒருவரையருவர் எதிர்க்கிறீர்கள் என்று எடுத்துச் சொல்ல ஒரு நியாயமான கொள்கை வேறுபாடும் இல்லாமல், சீட் பிடிப்பதை மட்டுமே லட்சியமாகக் கொண்டு, ஏன் மக்களை இவ்வளவு கேவலமாக ஏமாற்றுகிறீர்கள் ?
இவர்களுடைய ஏமாற்று திட்டங்கள் தேர்தலுக்கு முன்பு மட்டுமல்ல. பின்னரும் தொடர்பவை. எந்த கட்சிக்கு எத்தனை சீட் கடைசியில் கிடைக்கிறது என்பதைப் பொறுத்து தேர்தலுக்குப் பின்னர் இன்னும் புதுப்புது கூட்டணிகளை உருவாக்கப் போகிறார்கள். ஜனநாயகத்தையும் தேசத்தையும் காப்பாற்ற நிலையான ஆட்சி தேவை என்பதால் இப்படி அணி மாற வேண்டியிருக்கிறது என்று அப்போது அதற்கும் ஒரு நியாயம் பேசுவார்கள்.
கொஞ்சமாவது நேர்மை இருந்தால் இந்தக் கட்சிகள் இப்போது செய்ய வேண்டியது என்ன ? ஒவ்வொருவரும் தனித்தனியே போட்டியிடவேண்டும். அவரவருடைய அசலான மக்கள் ஆதரவு, பலம் என்ன என்பதைக் காட்ட முன்வரவேண்டும்.
ஆனால் நிச்சயம் அப்படி இவர்கள் செய்யப் போவதில்லை.
இந்தச் சூழ்நிலையில் மக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும் ? இவர்கள் அத்தனை பேரையும் நிராகரிக்க வேண்டும் என்பதே என் நிலைப்பாடு.
எப்படி நிராகரிப்பது ? தேர்தலன்று வீட்டிலேயே உடகார்ந்துகொண்டு நிராகரிப்பது தற்கொலைக்கு சமம். வாக்குச் சாவடிக்குப் போய் இவர்கள் அத்தனை பேருக்கும் எதிராக ஓட்டளித்து நம் நிராகரிப்பைப் பதிவு செய்ய வேண்டும்.
நல்லவேளையாக அதற்கு சட்டத்தில் அற்புதமான வழி இருக்கிறது. அதுதான் 49 ஓ !
வாக்குச் சாவடிக்குச் சென்றதும் நம் பெயர் பட்டியலில் இருக்கிறதா என்று சரிபார்த்துவிட்டு, வாக்குச் சாவடி அதிகாரி, நம்மிடம் ஒரு நோட்டில் கையெழுத்து வாங்குவார். பிறகு அடுத்த அதிகாரி நம் விரலில் மை வைப்பார். மை வைத்த உடன், நாம் எந்த வேட்பாளருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை; 49 ஓ பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொல்லவேண்டும். உடனே முதலில் நாம் கையெழுத்திட்ட அதே நோட்டில், அந்தக் கையெழுத்தின் பக்கத்திலேயே 49 ஓ என்று எழுதி இன்னொரு முறை நாம் கையெழுத்திட வேண்டும். இதுதான் 49 ஓவைப் பதிவு செய்யும் முறை.
இதைச் செய்யக் கூடாது என்று நம்மை யாரும் & சாவடி அதிகாரி முதல் கட்சிப் பிரதிநிதிகள் வரை தடுக்க முடியாது. அதற்கு அவர்கள் யாருக்கும் உரிமை இல்லை. தடுத்தால் போலீசை அழைக்கலாம். நரேஷ் குப்தாவுக்கு அங்கிருந்தே ஃபோன் செய்யலாம்.
ஏற்கனவே நரேஷ் குப்தா, தேர்தல் ஊழியர்களுக்கான பயிற்சி வகுப்பில் 49 ஓ பற்றியும் எடுத்துச் சொல்ல சென்ற தேர்தல் போதே உத்தரவிட்டிருக்கிறார்.அதனால் எந்த தேர்தல் ஊழியரும் இது எனக்குத் தெரியாது என்று சொல்ல முடியாது. தவிர இந்த முறை சமூக ஆர்வலர் அ.கி.வேங்கடசுப்பிரமணியன் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த மனுவின் பேரில், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் 49 ஓ பிரிவு பற்றிய சுவரொட்டியும் இடம் பெற இருக்கிறது.
தனியே போய் சாவடியில் பகிரங்கமாக 49 ஓ பதிவு செய்ய தயக்கமாக இருக்கிறதா? கவலை வேண்டாம். உங்கள் வாக்குச் சாவடியில் 49ஓ பதிவு செய்ய விரும்பும் இதர நண்பர்கள் சேர்ந்து ஒரு இடத்தில் சந்தித்து ஒன்றாகப் போய் வரிசையில் நின்று 49 ஓ பதிவு செய்யுங்கள்.
தேர்தல் வாக்குப் பதிவுக்கு இன்னும் ஏழு வாரங்கள் இருக்கின்றன. கொள்கையில்லாமல் சந்தர்ப்பவாதக் கூட்டணிகள் அமைத்துக் கொன்டு நம்மைத் தொடர்ந்து கொள்ளையடிக்கும் ஒரே நோக்கத்துடன் இயங்கும் அத்தனைக் கட்சிகளையும் நிராகரிக்க
கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படுங்கள்
வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை பிற்காலத்தில் படாமல் இருக்க இளமையில் கொஞ்சம் கஷ்டப்படலாமே?
· காலை 5 மணிக்கு எழுவது கஷ்டம். ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல், குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டப்படாமல் இருக்க படுக்கையை விட்டு 5 மணிக்கே எழலாமே!
· உடலில் முதுகுவலி, மூட்டுவலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்று கஷ்டப்படலாமே!
· பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் ஏற்படாமல் இருக்க சமையல் என்கிற ஒன்றை அறிய அல்லது சமைக்க கஷ்டப் படலாமே...
நானும் அறிவேன் இது எல்லாருக்கும் பொருந்தாது என்று, இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்வோம் பிற்காலத்தில் மற்றவரை சார்ந்திராது இருக்க.
ஒழுங்கற்ற, எதிர்பாராத கஷ்டத்தைத் தவிர்க்க திட்டமிட்ட கஷ்டங்கள் படுவது அவசியம்.
சிரமங்கள் நம்மை பலப்படுத்துகின்றன.
கஷ்டங்கள் நம்மை வலுப்படுத்துகின்றன.
துயரங்கள் நம்மை உருவாக்குகின்றன.
எதிர்பாராத சிரமங்களைத் தவிர்க்க எதிர்பார்க்கும் சிரமங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அனைத்து கஷ்டங்களும் ஒரு சுகமான அனுபவமே!!!
ஒரு காரியம் வெற்றியடைந்து விட்டால், 'நான் அப்படிச் செய்தேன் இப்படிச் செய்தேன் அதனால் தான் வெற்றி வந்தது' என்று குதிக்காதே. 'ஆண்டவன் அருளால் இந்த வெற்றி வந்தது' என்று அவனையும் பங்காளியாகச் சேர்த்துக் கொள்.
கஷ்டம் வந்து விட்டது எனறால் 'நான் தான் தவறு செய்து விட்டேன்' என்று வருந்தும் வேலையில்கூட, 'ஏதோ ஆண்டவன் கிருபை, இந்தக் கஷ்டம் இத்தோடு போயிற்று' என்று அமைதியடை.
இலாப நஷ்டங்களோ, நன்மை - தீமைகளோ உன்னால் தான் விளைகின்றன என்றாலும் அதற்குப் பின்னணியில் இருப்பது ஆண்டவனுடைய இயக்கமும் தான்.
பலரிடம் திறமை இருக்கிறது ஆனால் சிலருக்குத் தான் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அந்தச் சிலரிலேயும் மிகச் சிலர் தான் மிக வேகமாக முன்னேறுகிறார்கள், உலகப் புகழ் பெறுகிறார்கள்.அங்கும் ஆண்டவன் கிருபை இருக்கிறது.
இறைவனை நம்புகிறவன், இறைவனுடைய கருணையைய் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்.இறைவன் எப்போது வருவான் என்று ஆவலோடு இருக்க வேண்டுமே தவிர, இறைவனை நொந்துகொள்வதில் அர்த்தமில்லை.
இறைவனை அடைய விரும்புவோர், இறைவனும் தானும் ஒன்றே என்கிற உணர்வை முதலில் பெற்றாக வேண்டும்.
நல்லதையே நினை, நல்லதையே செய். உன்னில் இறைவனை நீ காண்பாய்!
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!
Wednesday, May 6, 2009
ஆட் கொல்லி நோய்

இது இன்றைய தேதியில்
உலகை பயமுறுத்தி கொண்டு இருக்கும
ஓர் ஆட் கொல்லி நோய்.
நண்பர்களே என் இனிய தமிழர்களே
இந்த நோய் முதியவர்களை விட
இளைய வயதினரையே அதிகம் தாக்குகின்றது .
ஆகவே வெளிநாட்டு வேலையில் இருக்கும்
என் இனிய தமிழர்களே
உங்களையும்
காத்து உங்கள் நண்பர்களையும் காத்து
இன் நோய் பரவாமல் இருக்க
எல்லாம் வல்ல இறைவனை வேண்டுவோம் .
Sunday, May 3, 2009
இலங்கை தமிழர்கள்
சும்மா ஒரு லு லு லு
மனிதன் = சாப்பிடுதல் + தூங்குதல் + வேலை செய்தல் + வாழ்க்கையை அனுபவித்தல்கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே மனிதன் = கழுதை + வேலை செய்தல்+ வாழ்க்கையை அனுபவித்தல்அதாவது மனிதன் - வாழ்க்கையை அனுபவித்தல் = கழுதை + வேலை செய்தல்
ஆக முடிவாக என்னான்னா, மனுஷனுக்கு வாழ்க்கையை அனுபவிக்கத் தெரியலைன்னா, அவன் சும்மா வேலை செஞ்சுக்கிட்டே இருக்குற கழுதைக்குச் சமம்.
சமன்பாடு - 2
ஆண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் சம்பாதித்தல்கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே ஆண் = கழுதை + பணம் சம்பாதித்தல்அதாவது ஆண் - பணம் சம்பாதித்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தன் ஆணாப் பொறந்து அவன் பணம் சம்பாதிக்கலேன்னா அவன் கழுதைக்குச் சமம்.
சமன்பாடு - 3
பெண் = சாப்பிடுதல் + தூங்குதல் + பணம் செலவு செய்தல்கழுதை = சாப்பிடுதல் + தூங்குதல்
ஆகவே பெண் = கழுதை + பணம் செலவு செய்தல்அதாவது பெண் - பணம் செலவு செய்தல் = கழுதை
ஆக முடிவாக என்னான்னா, ஒருத்தி பொண்ணாப் பொறந்து அவள் பணம் செலவழிக்கலேன்னா அவள் கழுதைக்குச் சமம்.
ஆகவே இறுதியாக,
சமன்பாடு 2, 3 இலிருந்து,
ஆண் - பணம் சம்பாதித்தல் = பெண் - பணம் செலவு செய்தல்
அதாவது ஆண் பணம் சம்பாதிக்கலைன்னா பெண் பணம் செலவழிக்க மாட்டாள்.ஆகவே, முடிவு 1 - ஆண், ஒரு பெண்ணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் சம்பாதிக்கிறான்..முடிவு 2 - பெண், ஒரு ஆணைக் கழுதையாக விடாமல் இருப்பதற்காகப் பணம் செலவு செய்கிறாள்.
அப்படீன்னா,
ஆண் + பெண் = கழுதை + பணம் சம்பாதித்தல் + கழுதை + பணம் செலவு செய்தல்
இதிலிருந்து என்ன தெரியுதுன்னா,
சும்மா வேலை செஞ்சுக்கிட்டிருக்கிற ரெண்டு கழுதைங்க சேர்ந்து பணம் சம்பாதிக்கிறதும் செலவழிக்கிறதுமா வாழ்க்கையை அனுபவிக்குறதுதானுங்க திருமண வாழ்க்கை..!
Wednesday, April 22, 2009
எனக்கு புரியவில்லை....

Tuesday, March 31, 2009
வெளிநாட்டு வேலை!!!
வெளிநாட்டு வேலை!!!விலையானது வேலை!
வாலிபன் நான்வழியற்று
நிற்கையில்விடியலாய் ஒரு விளம்பரம்.
விலையில்லாதவிசா!
இதோ!
பாலைமநலைஏரமாக்கியதுயெந்வியர்வைதுளிகள்.
கண்ணுக்கெட்டா
தூரத்தில்என் மகன்கஸ்டப்படுகிறான்,
இது என் பெற்றோரின் ஏக்கம்.
துபாய் போய் விட்டான்,
இனி பணமழைதான்.இமையை உயர்த்தி சமுகம்இப்படி பார்க்கும்.
தங்கையின் திருமணம்மகிழ்ந்தேன்
தந்தையின் மரணம்மனம்
நொந்தேன்நேரில் பார்த்ததல்லபோனில் கேட்டு,
முண்றாண்டுக்கு ஒரு முறைமுன்று மாத விடுப்பு.
இருபத்திரெண்டாய்சென்றவன்இருபத்தி ஐந்தாய்திரும்பினேன்.
திரும்பியதும் என்
திருமணம்மாதம் முன்று கடந்து,
மறந்திருந்தது அயல் நாடுமறுபடி நினைவில் எழுந்தது.
மகிழ்ச்சிக்கு வேலி போட்டு,
மனையாளை தனியே விட்டு,கை அசைக்கச்
சென்றேன்காசு அனுப்பி வைக்க சென்றேன்.
பொருளாதாரத்தை தேடிச் சென்ற எனக்குபொருளே தூரமாகியது.
இளமையை தியர்கித்துஇளநரை
தளிர்விட்டுதாயகம் திரும்பினேன்.
விடு வந்ததும்,
வாசலில் ஒரு இளம்பிஞ்சு!
அன்பின் மிகுதியால்வாரியணைக்கச்
சென்றேன்அறியாதவன்
என்பதால்அச்சம் மேலிட்டுஅம்மா என்றழைத்தது.
அழுது கொண்டே ஓடியது
என் ஆசை வாரிசுபெற்ற பிள்ளைக்கேபெற்றவன்
இவனென்றுஅறிமுகம் செய்ய வேண்டியஅவலத்தை
நினைத்துமானம் வெதும்பினேன்.
மறுமுறை செல்லுகிறமகளோடு கொஞ்சுகையில்,
மகிழ்ச்சியின்
உச்சத்தில்மனப்போக்கை
விட்டுவிட்டுமனப்போக்கை
விட்டுவிட்டுமிஞ்சிய இளமையையும் தியாகிக்க ...
படித்ததில் பிடித்தது
படித்ததில் பிடித்தது
1. பேசும்முன் கேளுங்கள்,எழுதும்முன் யோசியுங்கள, செலவழிக்கும்முன்சம்பாதியுங்கள்
2. சில சமயங்களில்இழப்புதான்
பெரிய ஆதாயமாகஇருக்கும்
3. யாரிடம் கற்கிறோமோ
அவரேஆசிரியர்.கற்றுக்கொடுப்பவரெல்லாம் ஆசிரியர்
அல்லர்.
4. நான் மாறும்போது தானும்மாறியும், நான்தலையசைக்கும்போது தானும் தலையசைக்கும்நண்பன் எனக்குத் தேவையில்லை.
அதற்கு என் நிழலே போதும்!
5. நோயை விட அச்சமே அதிகம்கொல்லும்!
6. நான் குறித்தநேரத்திற்குக் கால்மணி நேரம்முன்பே சென்று விடுவது வழக்கம். அதுதான்என்னை
மனிதனாக்கியது.
7. நம்மிடம் பெரிய தவறுகள்இல்லை எனக் குறிப்பிடுவதற்கே,சிறிய தவறுகளைஒப்புக்கொள்கிறோம்!
8. வாழ்க்கை என்பது குறைவானதகவல்களை
வைத்துக்கொண்டு
சரியான முடிவுக்கு வரும்ஒரு
கலை.
9. சமையல் சரியாக அமையாவிடில்ஒருநாள் இழப்பு. அறுவடை
சிறக்காவிடில் ஒரு ஆண்டுஇழப்பு. திருமணம்பொருந்தாவிடில்
வாழ்நாளே இழப்பு.
10. முழுமையான மனிதர்கள்இருவர். ஒருவர்
இன்னும்
பிறக்கவில்லை. மற்றவர்இறந்துவிட்டார்.
11. ஓடுவதில்
பயனில்லை.நேரத்தில் புறப்படுங்கள்
12. எல்லோரையும் நேசிப்பதுசிரமம்.
ஆனால்பழகிக்கொள்ளுங்கள்
Tuesday, March 24, 2009
தமாசு
"இனிமேல், ட்ரெய்னில் கடைசிப்பெட்டி என்பதே இருக்கக்கூடாது. அப்படி, கடைசிப்பெட்டி வைப்பது கட்டாயம் என்றால், தயவு செய்து, ட்ரெய்னில் நடுவில் வையுங்கள்."
*********
எலிக்கு பிடிக்காத படிப்பு எது?
பொறியியல்.
*********
எங்க "ஆ" காட்டுங்க பாககலாம்...
ஏன் டாக்டர் நீங்க "ஆ" பார்த்ததே இல்லையா...?
***********
என்னது பேப்பர் ரோஸ்ட் ஓரத்திலே வரிசையா ஓட்டை இருக்குது?
இது கம்ப்யூட்டர் பேப்பர் ரோஸ்ட்
***********
நகை போடாமல் இருப்பதே மேல்...
ஏன்
நகை போட்டா அது ஃபீமேல்..
***********
என்னங்க நாலு போன்கால் பேசிட்டு ஒண்ணுக்கு காசு தர்றீங்க?....
யோவ்... நாலு கால் ஒண்ணு தானேயா....
***********
ஒரு பையன் தன் தலைக்கடியில் டிக்ஸ்னரியை வச்சுகிட்டு தூங்குறான், ஏன்?
ஏன்னா... அவனுக்கு அர்த்தமில்லாத கனவா வருதாம்...
***********
ஒரு பையன் ஸ்கேலை கையில் வச்சுகிட்டு சாப்பிடறான்.. ஏன்?
ஏன்னா... அவன் அளவோடு சாப்பிடறான்
***********
உங்க மகன் சிகரெட் பிடிகிறானே.. உங்களுக்கு தெரியுமா..?
எனக்கு சிகரெட் பிடிக்க தெரியாதுங்க...
************
ஒரு பாதிரியாரிடம் ஒரு பெண் முறையிட்டாள்.." ஃபாதர்.. நான் இரண்டு பெண் கிளிகள் வளர்க்கிறேன்.. அவை எப்போதும் டி.வி.யில் வரும் காதல் பாட்டுகளையே பாடிக்கொண்டு இருக்கின்றன. என்ன செய்வது..?
ஃபாதர் சொன்னார்.." என்னிடமும் 2 ஆண் கிளிகள் உள்ளன.. எப்போதும் கடவுளை வேண்டி, தியானம் செய்து கொண்டும் பக்திப் பாடல்களைப் பாடிக்கொண்டும் இருக்கின்றன. உன் கிளிகளை அவையுடன் ஒரு வாரம் பழகவிட்டால், நல்ல பழக்கங்களை கற்றுக்கொண்டுவிடும்."
அந்தப் பெண்ணுக்கு இது நல்ல யோசனையாக தோன்றவே மறுநாளே கொண்டுவந்து விட்டாள்.
பாதிரியார் பெருமையுடன், "என் கிளிகள் என்ன செய்கின்றன என்று பார்" என்றார்.
அவருடைய ஆண் கிளிகள் இரண்டும் கடவுளை மனம் உருகி வேண்டிக்கொண்டிருந்தன. பெண் கிளிகளோ, "அழகிய அசுரா.. அழகிய அசுரா.. அத்து மீற ஆசை இல்லையா..?" என பாடின.
தியானத்திலிருந்த ஆண்கிளிகளில் ஒன்று சட்டென்று பெண்கிளிகளைப் பார்த்து பின்னர் தன் நண்பனை உசுப்பி, டேய்.. அங்க பாரு.. நம்ம வேண்டுதல் பலிச்சுடுச்சு" என்றது உற்சாகத்துடன்..!!!!
************
காதலியை பார்க்க போகும் போதெல்லாம் அவர் ஏன் கற்பூரம், வாழைப்பழம், தேங்காய் வாங்கிட்டு போகிறார்?
அது தெய்வீக காதலாம்
*************
ஓடிப்போயிடலாமா டார்லிங்?
ஏன் இப்படி பயந்து சாகிறீங்க நடந்தே போகலாம்.
*************
ஓடிப்போயிடலாமா டார்லிங்?
ஏன் இப்படி பயந்து சாகிறீங்க நடந்தே போகலாம்.
**************
ஆசிரியர்: இந்த உலகத்தில் முடியாதது எதுவும் இல்லை.
ஒரு பையன் எழுந்து உடனே..
"சார். டூத்பேஸ்ட்டை அதோட ட்யூப்ல இருந்து எல்லாத்தையும் வெளியே எடுத்துட்டு திரும்ப உள்ள வைக்க முடியுமா"
======================================================
"என்னோட அப்பா ஒரே விரலால எட்டு பேரை மேலே தூக்குவார்"
"எப்படி"
"அவரு லிப்ட் ஆபரேட்டர்"
======================================================
மனைவி: என்னங்க... நீங்க எனக்கு நகையும், புடவையும் வாங்கித் தர்ற மாதிரி கனவு கண்டேங்க.
கணவன்: ம்.. உன் அப்பன் அந்த பில்லுக்கு பணம் கட்டுற மாதிரி எனக்கு கனவு வந்துச்சு...
Monday, March 23, 2009
சுத்தம் சுகாதாரம்
சுத்தம் சுகாதாரம்
அப்படினா இன்னாங்கோ
குப்பதொட்டி வைக்கிறது அரசாங்கத்தோட கடமை. ஆனால் அதில் போடாமல் அதி சுற்றி போடுவது நம் உரிமை !!!!!!!!!!.
இங்கு எச்சில் துப்பாதிர்கள் இது எங்கும் காணலாம் காறி துப்பிய இடங்களில் எல்லாம் !!!!!!.
குப்பை போடாதிர்கள்
இது நம்மூர் கோவில்களில் எழுதி வைத்திருபார்கள்.
அங்கதாங்க நம்ம ஆளுங்க சும்மா பின்னி எடுப்பாங்க எப்படினாவீட்டில் இருந்து கொண்டுவந்த கட்டு சோறு தொட்டுக்க தேங்கா கெட்டி சட்டினி இதெல்லாம் சாப்பிட்டு விட்டு மீதி எல்லாம் அங்கேயே போட்டுவிட்டு சாமீ கும்பிறதுதங்க கிளைமாக்ஸ்
சரி நீங்க எப்படி ?
யாருக்குங்க உங்க வோட்டு
யாருக்குங்க உங்க வோட்டு
தெய்வத்தோடும், மக்களோடு மட்டும் கூட்டணி. இப்ப கேட்கிறேன்... யாருடன் கூட்டணி வைக்கலாம்? தைரியமாக கை தூக்குங்கள். யாருடனாவது கூட்டணி வேண்டும் என்றால் நான் அடையாளம் காட்டுபவர்களுக்கு ஓட்டளிக்க வேண்டும்
அட நம்ம கேப்டன் தானுங்க
உங்களுடைய குடும்ப உறுப்பினர்களை கட்சிலேயே வளர்க்கிறீர்கள். அவர்களின் அனுமதியின்றி அணுவும் அசைவதில்லை என்ற எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுக்கு நீங்கள் எப்படி பதில் சொல்லப் போகிறீர்கள்?
கேட்டுக் கேட்டு புளித்துப்போன கேள்வி. பல முறை இதற்கு நான் பதிலளித்துவிட்டேன்
இது நம்ம kalaiger iyya thanga
நம்மை நல்லமுறையில் பயன்படுத்தினால் கூட்டணி வைப் போம். இல்லாவிட்டால் தனித்து நின்று அவர்களுக்கு பாடம் புகட்டுவோம். இன்று நமது நாட்டில் விலைவாசி ஏற்றம், மின்வெட்டால் தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலை மாற நமது கட்சிக்கு மக்கள் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கொள்கையுடைய கட்சிகள் ஆட்சி செய்ய வேண்டும்.
இது நம்ம karthik சார் தானுங்க
Wednesday, March 18, 2009
முதல் வணக்கம்
மனம் திறந்து பேசு மனதில் பட்டதெல்லாம் பேசாதேஇது நான் சொன்னது அல்ல அன்னை தெரஷா அவர்கள் சொன்னது நாம் பேச நினைப்பதை இந்த தலத்தில் எழுதுவோம்
தவறுகள் ஏதேனும் இருப்பின் மன்னிக்கவும்
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
