மறதி ஒன்று இருப்பதால்தான்
மனிதன் வாழ முடிகிறது .
வாக்குறுதிகளை மறப்பதால் தான்
வாக்குறுதிகள் தரப்படுகின்றன.
எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்
வார்த்தை என்னவோ கட்டித்தேன் .
வாழ்க்கை மட்டும் எட்டிக்காய் .
ஆண்டவர்கள் நிலை என்ன?
ஆள விட்டவர்கள் நிலை என்ன ?
ஞாபகம் தெரிந்த நாள் முதல்
ஞாபகம் மறக்கும் நாள் வரை
தெரிந்தவர்கள் இறப்பை எண்ணிவிடலாம் .
ஆட்சியில் சம்பாதிதவர்களை என்ன முடியுமா ?
நமது பொருளாதார கொள்கை
பணக்காரன் மேலும் பணக்காரன்
ஏழை மேலும் ஏழை
எப்படி எழ்மை ஒலியும்
எந்த ஆட்சி வந்தால்
ஏற்ற தாழ்வுகள் அகலும்
சாதிமத சண்டைகள் ஒலியும்
அரசு துறைகள் திருந்தும்
வாக்குகளைப் பெற்றவரிடம்
வாக்குறுதிகள் என்னவாயிற்று என்றால்
"சொல்லுதல யாருக்கும் எளிய - அரியவாம்
சொல்லியவண்ணம் செயல் " என
திருக்குறளைக் காட்டுவர்
வாக்கலாரகிய நாமும்
" இன்னா செய்தாரை ஒருத்தல் -அவர் நானா
நன்னயம் செய்துவிடல் " என ,
திருக்குறள் படி நடந்து
வாக்களிக்கும் கடமையை செய்வோம்
வாக்களிக்கும் பாவிகள் .!!!
வெந்ததை தின்போம்,
விதி முடிந்தால் சாவோம் !!!!!!
No comments:
Post a Comment