Friday, May 8, 2009
கஷ்டப்படாமல் இருக்க கஷ்டப்படுங்கள்
வாழ்க்கையில் பலவிதமான கஷ்டங்களை பிற்காலத்தில் படாமல் இருக்க இளமையில் கொஞ்சம் கஷ்டப்படலாமே?
· காலை 5 மணிக்கு எழுவது கஷ்டம். ஆனால் பிற்காலத்தில் படுக்க இடம் இல்லாமல், குடியிருக்க வீடு இல்லாமல் கஷ்டப்படாமல் இருக்க படுக்கையை விட்டு 5 மணிக்கே எழலாமே!
· உடலில் முதுகுவலி, மூட்டுவலி என்று திணறாமல் இருக்க உடற்பயிற்சி என்று கஷ்டப்படலாமே!
· பட்டினி அல்லது கடை உணவு என்கிற பெருங்கஷ்டம் ஏற்படாமல் இருக்க சமையல் என்கிற ஒன்றை அறிய அல்லது சமைக்க கஷ்டப் படலாமே...
நானும் அறிவேன் இது எல்லாருக்கும் பொருந்தாது என்று, இருந்தாலும் முடிந்தவரை முயற்சி செய்வோம் பிற்காலத்தில் மற்றவரை சார்ந்திராது இருக்க.
ஒழுங்கற்ற, எதிர்பாராத கஷ்டத்தைத் தவிர்க்க திட்டமிட்ட கஷ்டங்கள் படுவது அவசியம்.
சிரமங்கள் நம்மை பலப்படுத்துகின்றன.
கஷ்டங்கள் நம்மை வலுப்படுத்துகின்றன.
துயரங்கள் நம்மை உருவாக்குகின்றன.
எதிர்பாராத சிரமங்களைத் தவிர்க்க எதிர்பார்க்கும் சிரமங்களை ஏற்றுக் கொள்ளுங்கள்.
அனைத்து கஷ்டங்களும் ஒரு சுகமான அனுபவமே!!!
ஒரு காரியம் வெற்றியடைந்து விட்டால், 'நான் அப்படிச் செய்தேன் இப்படிச் செய்தேன் அதனால் தான் வெற்றி வந்தது' என்று குதிக்காதே. 'ஆண்டவன் அருளால் இந்த வெற்றி வந்தது' என்று அவனையும் பங்காளியாகச் சேர்த்துக் கொள்.
கஷ்டம் வந்து விட்டது எனறால் 'நான் தான் தவறு செய்து விட்டேன்' என்று வருந்தும் வேலையில்கூட, 'ஏதோ ஆண்டவன் கிருபை, இந்தக் கஷ்டம் இத்தோடு போயிற்று' என்று அமைதியடை.
இலாப நஷ்டங்களோ, நன்மை - தீமைகளோ உன்னால் தான் விளைகின்றன என்றாலும் அதற்குப் பின்னணியில் இருப்பது ஆண்டவனுடைய இயக்கமும் தான்.
பலரிடம் திறமை இருக்கிறது ஆனால் சிலருக்குத் தான் சந்தர்ப்பம் வாய்க்கிறது. அந்தச் சிலரிலேயும் மிகச் சிலர் தான் மிக வேகமாக முன்னேறுகிறார்கள், உலகப் புகழ் பெறுகிறார்கள்.அங்கும் ஆண்டவன் கிருபை இருக்கிறது.
இறைவனை நம்புகிறவன், இறைவனுடைய கருணையைய் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டும்.இறைவன் எப்போது வருவான் என்று ஆவலோடு இருக்க வேண்டுமே தவிர, இறைவனை நொந்துகொள்வதில் அர்த்தமில்லை.
இறைவனை அடைய விரும்புவோர், இறைவனும் தானும் ஒன்றே என்கிற உணர்வை முதலில் பெற்றாக வேண்டும்.
நல்லதையே நினை, நல்லதையே செய். உன்னில் இறைவனை நீ காண்பாய்!
இந்த நாள் இனிய நாளாக அமைய வாழ்த்துக்கள்!!!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment