Saturday, May 16, 2009

கருவறைக்குள் ....











வெளியே ஓயாத ஒப்பாரி
செவிப்பறை கிழிக்கும் குண்டுகள் ..!

உதைக்கும் பூட்ஸ் கால்கள்
நெஞ்சினில் பதிய
பழகி போனது அலறல் சத்தம் ...!

உள்ளே நானும் வெளியே என் தாயும்
பிறந்த மேனியாய் சிலநாள் ....


தமிழனாகப் பிறப்பது
அத்தனை பெரிய குற்றமா ?!

எனக்காகவே உயிர் வாழ் கின்றலாம்
வயிற்றை தடவிக் அழுது கொண்டே
அடிக்கடி சொல்கிறாள் அம்மா

பனிக்குடம் உடைய
பத்து நாட்களே பாக்கியாம் ...

வெளியே வந்தும் என்ன பயன் , அம்மா?
என்னையும் ஒருநாள்
கொல்லத்தானே போகிறார்கள் !

மிச்சமுள்ள நாட்கள்
கொடுரமாய் நீள்வதற்கு பதில்
நச்சுக் கொடி என் கழுத்தை
இன்றே இருக்கிடக் கூடதா ??
- நன்றி
பொன். திருமலை
ஜூனியர் விகடன்





No comments:

Post a Comment